28 August 2016

சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா நோய்களுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த மதுரை தமிழர் கருப்பையா முத்துமணி

சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா நோய்களுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த மதுரை தமிழர் கருப்பையா முத்துமணி.

முதல் முதலா சங்கு சக்கரம் கதை படிக்கிறேன்.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வர வேண்டும்!...

அதெப்படி?.
சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.

அதை யார் அவருக்குக் கொடுத்தது?. எப்படி திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?.

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச் செய்யும் தொழிற் கடவுளான திருமால் சங்கு, சக்கரம் இரண்டையும் சிவ பூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

சங்கு பெற்ற கதை:-

சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட பலப் பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம் பொருளை அடைந்ததால் பாஞ்ச சைனம் எனப் பெயர் பெற்றது.

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக் கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

திருமால் ஆசைப் பட்ட மங்கலப் பொருளான சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவ பூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக் கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது.

திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சக்கரம் பெற்ற கதை:-

சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. இந்திரனை ஓட ஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறி வைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.

அந்தளவுக்கு அவனது தவ பலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால்தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்?. அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி,என்றார். தாராளமாக! தேர்வைத் துவக்கலாம், என்றான்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச் சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர் காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.

தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.

அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

சங்கும்,சக்கரமும் நம் சிவனும்,விஷ்ணுவும்தான்...

நண்பனுக்காக மாணவர்களே கட்டிய கழிப்பறை!

தமிழக சுதேசி மக்கள் இயக்கம் சார்பில் மனதார வாழ்த்துக்கள்.

அனைவரும் இந்த நட்பை பாராட்டுவோம். வாழ்விலே சிறந்த பருவம் மாணவர்கள் பருவம். இந்த பருவத்தில்  எவ்வளவு சிறந்த சேவை.

                          நண்பனுக்காக  மாணவர்களே கட்டிய கழிப்பறை!  மலைக்க வைக்கும் சின்னஞ்சிறு மாணவர்களின் மனிதநேயம்

பள்ளிக்கே வராமல் நோயால் சுருண்டு கிடந்த நண்பனுக்கு கழிப்பறை கட்டித் தந்துள்ளனர் நாகப்பட்டினம் மாணவர்கள். ' கழிப்பறை இல்லாததே நோய் வருவதற்குக் காரணம் என்பதை உணர்ந்ததால், சக மாணவர்களிடம் வசூல் செய்து கழிப்பறை கட்டும் பணியை முடித்தோம்' என உற்சாகமாகப் பேசுகின்றனர் மாணவர்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் உள்ள எஸ்.கே.அரசு உயர் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவர் அகத்தியன். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்த அகத்தியன், அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளார். சக நண்பர்களான வசீகரன், ராகுல், நவீன்ராஜ், ஹரிஷ் ஆகியோர், ' ஏன் பள்ளிக்கு வருவதில்லை?' என விசாரித்துள்ளனர்.

அவர்களிடம், தன் காலில் இருந்து தோல் நோயைக் காட்டி அழுதிருக்கிறார் அகத்தியன். ' அடிக்கடி விஷக் காய்ச்சலும் வந்துவிடுகிறது. சரியான டாய்லெட் இல்லாததுதான் காரணம்' என அழுதிருக்கிறார். ' திறந்தவெளியில் மலம் கழித்ததால்தான் அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகிறார்' என்பதை உணர்ந்த நண்பர்கள், ' நாமே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, கழிப்பறை கட்டினால் என்ன?' என்ற முடிவுக்கு வந்து, பள்ளி ஆசிரியர் வீரமணியிடம் கூறியுள்ளனர். அவரும், 'மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இந்தத் திட்டம் அமையும். உடனே தொடங்குங்கள்' என உற்சாகப்படுத்தினர்.

இதையடுத்து, சுதந்திரதினவிழா அன்று கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்பு உணர்வு பேரணியை நடத்தினர். கூடவே, சக மாணவர்களிடம் கையேந்தி காசு வசூல் செய்தனர். ஒருவழியாக கழிப்பறை கட்டுவதற்கான தொகை சேர்ந்துவிட்டது. இதையடுத்து, அகத்தியனின் நண்பர்களே முன்னின்று கழிப்பறையைக் கட்டும் பணியை நிறைவு செய்தனர்.

'உயிர் காப்பான் தோழன்' என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளனர் இந்த மாணவர்கள். இநத சின்னஞ்சிறு வயதில் இவ்வளவு பெரிய எண்ணம் வாழத்துக்கள்.

வாணியச் செட்டியார் உடன் தூத்துக்குடி திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் கால காலமாய் கல்யாணம் செய்து வருகின்றனர். இவர்களை நாம் எப்படி தெலுகு கன்னடம் என்று பிரிக்க இயலும்?

வாணியச்செட்டியார் என்பவர்கள்  கண்டலா கணிகா தெலிகுல செக்கலா போன்ற தெலுங்கு கன்னட உட்பிரிவுகளை கொண்டவர்கள். செட்டியார் என்ற பெயரை பயன்படுத்திக்கொண்டு தங்களை தமிழராக காட்டிக்கொண்டு செயல்படுவதில் வல்லவர்கள். தமிழ்நாடு அரசு சாதிப்பட்டியலில் 121 எண் கொண்ட பிற்படுத்தப்பட்ட இனக்குழு இது.

வருங்கால தமிழ்நாடு தேர்தல்களில் தமிழ்த்தேசியத்தலைமை இந்த குலத்தில் இருந்து வருவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கருதலாம்.

தமிழ்நாடு சாதிப்பட்டியல் கருத்திடும் இடத்தில் உள்ளது. அதில் 121 வலதுபக்க எண் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் அட்டவணையில் இதை இரண்டு உட்பிரிவுகளாக கொடுத்துள்ளனர்.

173 Vaniyar 121 (including Gandla, Ganika, Telikula and Chekkalar)
174 Vania Chettiar 121

Yup.